பஞ்சாப் ரெயில் விபத்து – பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு

250 0

அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.
இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment