ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

288 0

201609231106355450_afghanistan-blames-pakistan-for-attacks-on-its-civilians_secvpfதீவிரவாதிகளை உருவாக்கி தாக்குதல் நடத்த ஏவுகிறது என இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஐ.நா. சபையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சனை பற்றி குறிப்பிட்ட அவர் அங்கு இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

அவரை தொடர்ந்து பேசிய ஐ.நா.வுக்கான இந்திய செயலாளர் ஏனம் கம்பீர் நவாஸ் செரீப்பின் பொய் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. பயங்கரவாதமே மிகப்பெரிய மனித உரிமை மீறல். இதை அரசின் கொள்கையாக பின்பற்றுவது ஒரு போர்க்குற்றமாகும். தீவிரவாதிகளை ஆதரிப்பதன் மூலம் எங்கள் நாடு (இந்தியா) மட்டுமின்றி அண்டை நாடுகளும் பாதிக்கப்படுகின்றன என்றார்.

நேற்று ஐ.நா.சபை பொதுக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் துணை அதிபர் சர்வார் டேனிஸ் பேசினார். அப்போது அவரும் பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக பாகிஸ்தான் திகழ்கிறது. எனவே தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டோம். ஆனால் அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி அளித்து ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருகிறது.

பாகிஸ்தான் 2 விதமான கொள்கைகளுடன் விளங்குகிறது. இது நல்ல மாற்றம் கெட்ட தீவிரவாதிகள் என வகைப்படுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் அமைதியை குலைக்கின்றனர்.

இந்த தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த ஏவி விடப்பட்டுள்ளது. இத்தாக்குதல் ஒரு ஆதாரமாகும். 10-க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் ஸ்திரதன்மையையும், அமைதியையும் சீர் குலைக்க ஏவி விடப்படுகின்றன.அனைத்து அண்டை நாடுகளுடன் அமைதியுடன் வாழவே ஆப்கானிஸ்தான் எப்போதும் விரும்புகிறது.இவ்வாறு அவர் பேசினார்.