அட்மிரல் ரவீந்திரவுக்கு புதிய பதவி

203 0

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புக்களை குறைப்பதற்கு தேசிய திட்டமொன்றை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வகிக்கும் பதவிகளுக்கு மேலதிகமாகவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனம் கடந்த 12ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017 காலப்பகுதியில் முறையே 760 மற்றும் 678 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் இந்த வருடத்தின் அரைவாசி காலப்பகுதிக்குள் 412 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் குறித்த உயிரிழப்புக்களில் அதிகமானவை கொழும்பு மற்றும் காலி மாவட்ட கடற்பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கும் தேசிய திட்டத்தின் ஓர் அங்கமாக முப்படைகள், பொலிஸ், கடலோர பாதுகாப்பு படை, சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் பலருக்கு உயிர்காப்பு பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment