தாமரைக் கோபுர அமைப்பு பணிகள் 95% நிறைவு

20 0

தாமரைக் கோபுர அமைப்பு பணிகள் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்து இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சகல நிர்மாணப் பணிகளும் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்க்கப்படுதாகவும், ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

தாமரைக் கோபுரத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆரம்பமானது. இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை முன்னெடுத்தது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக 10 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயரமான கட்டடமாக அது திகழும். 350 மீற்றர் உயரமாக அமைக்க முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் அது தற்போது 356 மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிக வேகமான மின்தூக்கியும் இதில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது செக்கனுக்கு 7 மீற்றர் வரையில் செல்லக்கூடியது. அத்துடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாநாட்டு மண்டங்கள் அமைக்கப்பட்டதுடன், அந்த இரண்டு மண்டபங்களிலும் ஒரே தடவையில் சுமார் 700 பேர் வரை ஒன்று கூடுவதற்கான வசதிகளும் இதில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி-பந்துலால் பண்டாரிகொட

Posted by - September 26, 2018 0
வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். நேற்று (25) காலி…

மஹிந்த மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளது – நாமல்

Posted by - May 3, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்…

தந்தையை கொன்ற புதல்வர்கள் தலைமறைவு

Posted by - July 26, 2016 0
அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் தந்தை ஒவரை கொலை செய்த புதல்வர்கள் இருவரை தேடி காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த 22ஆம் திகதி  தாக்குதலுக்குள்ளான தந்தை பதவிய…

மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும்- நிமால் சிறிபால டி சில்வா

Posted by - October 24, 2017 0
புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் போது, மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா…

சிறுபான்மைக் கட்சிகளின் உடன்படிக்கையை வெளிப்படுத்துக- அரசாங்கத்திடம் தினேஷ்

Posted by - May 2, 2018 0
அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னர் அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இரண்டும் சிறுபான்மைக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய இணக்கப்பாட்டு உடன்படிக்கை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என…

Leave a comment

Your email address will not be published.