அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை – சுமந்திரன்

16 0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என  தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, 17 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இவை கலந்துரையாடப்படுமா என்பது தொடர்பில் முடிவு ஏதும் இல்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமை்பபும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்,

அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொட்டுத் தொட்டு சில விடையங்களைச் செய்து வருகின்றது.

ஆனால் ஒன்றையும் முறையாக செய்து முடிக்கவில்லை ஆகையால் காலக்கெடு ஒன்றினை விதித்து வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகச் செயற்படவேண்டும் என்ற கருத்து எங்கள் மத்தியில் பலரிடம் இருக்கிறது.

ஆனால் என்னென்ன விடயங்கள்  சம்பந்தமாக நிபந்தனை வைக்கவேண்டும் எந்தக் காலக்கெடு கொடுக்கவேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சர்கள் தொடர்பான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவசரமாக சந்திக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை  முன்வைத்தபோது 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான கூட்டம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக கலந்துரையாடலாம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அன்றைக்கே ஒரு தீர்மானம் எடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது என மேலும் தெரிவித்தார்.

Related Post

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்

Posted by - September 16, 2017 0
பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றான 95 மாவட்டத்தில் அமைந.துள்ள ஆர்ஐந்தே மாநகரத்தில் திலீபனின் நினைவாக நாட்டப்பட்ட நினைவுக்…

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016 0
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு…

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்ன

Posted by - October 25, 2017 0
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017 0
யாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….  

மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம்

Posted by - March 27, 2017 0
மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மக்களின்…

Leave a comment

Your email address will not be published.