இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி

14 0

சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டமானது வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பமாகி பஜார் வீதிவழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர்.

10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர் நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளை தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கெடுக்காதே கெடுக்காதே இந்துக்களின் பாரம்பரியத்தை கெடுக்காதே, சபரிமலை புனிதத்தை கெடுக்காதே, மாற்று மாற்று தீர்ப்பை மாற்று போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள் அரசாங்க அதிபர் ஐ.கனீபாவை சந்தித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

Related Post

இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - April 27, 2017 0
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட…

முடிவுக்கு வந்தது வடமாகாண சபையின் குழப்பம்!

Posted by - June 19, 2017 0
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தொலைபேசிமூலம் அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாண…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான….(காணொளி)

Posted by - February 15, 2017 0
  ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாண…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 20, 2019 0
பயங்கரவாத தடை சட்டத்திற்கு  எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக…

மன்னாரில் சதொச எலும்புகூடுகள் அகழ்வு பணி

Posted by - July 20, 2018 0
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 38ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான்…

Leave a comment

Your email address will not be published.