தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்-அடைக்கலநாதன் 

14 0
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கருத்து தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இன்னமும் இருப்பதாகவும் அந்த நம்பிக்கையின் காரணத்தாலேயே  வெளியில்    இருந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து கூறுகையில் தமிழ்மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைத்தார்கள். அதுபோல், சில விடயங்களைத் தாம் நிறைவேற்றியிருப்பதாகவும் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை என்று இழக்கப்படுகிறதோ அன்றைய தினம் தமது ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவத்தார்.

Related Post

தமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்

Posted by - April 18, 2019 0
தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று  முல்லைத்தீவு செம்மலை…

வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயளர்கள் விசனம்

Posted by - March 2, 2019 0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயாளர்கள் அசௌகரியத்தில். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக சிற்றுண்டிச்சாலை இயங்காத…

யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 15, 2016 0
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தங்களது…

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து

Posted by - February 11, 2019 0
பருத்தித்துறை வீதி, அச்சுவேலிப் பகுதியில்   இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் குறித்த…

Leave a comment

Your email address will not be published.