யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய சிங்கள இளைஞர்கள்!

4947 139

யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போது அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் எனக் கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலை மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர்.

குறித்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.

Leave a comment