கொஸ்லந்த, ஹிவல்னந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
நேற்று (11) இரவு இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிற்கு முன்னால் உள்ள மாமரத்தில் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்ததை காலை வீட்டில் இருந்து வௌியே வந்த உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்வை என்பதுடன், மாணவன் இந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

