சீரற்ற காலநிலையால் மன்னர் மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

299 0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 86 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளை இடம் பெறாத நிலையில் குறித்த வளாகத்தினை முழுமையாக சுற்றி மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் மன்னார் மனித புதை குழி தொடர்பான   நிலையினை அறிவதற்காண அகழ்வு மற்றும் ஆய்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது .

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த காற்று மற்றும் வானிலை மற்றும் அதிகரித்த மழை காரணமாக அகழ்வு பணிகள் நடை பெறும் வளாகமானது முழுவதும் நீரினல் சூழ்ந்து காணப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெறும் சிரமம் ஏற்பட்டது.

அது மட்டும் இன்றி அகழ்வு பணியின் போது அப்புறப்படுத்தாமல் புதை குழியில் காணப்படுகின்ற மேலதிக மனித எலும்புக்கூடுகள் சிதைவடைவதற்கான வாய்பும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான நிதி பங்களிப்பு மற்றும் உதவியானது காணமல் ஆக்கப்பட்டோருக்காக செயற்படும் அலுவலகத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக மனித புதை குழி வளாகத்தினை முழுவதுமாக சுற்றி மூடுவதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள்   வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று வளாகம் முழுவதையும் அதீத காற்று மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment