10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா

194 0

எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனவே பத்தாம் திகதியை அண்மிக்கும்போது மக்கள் பீதி நிலையிலேயே உள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்  இணைதேசிய அமைப்பாளருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கையினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி தெளிவுறுத்துமாறு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டுக்கொண்டிருந்தோம். எனினும் அது பற்றி தெளிவூட்டவில்லை.

மேலும் தகவல் அறியும் சட்ட மூலத்திற்கு இணங்க அது குறித்து வெளிப்படுத்துமாறும் வேண்டிக்கொண்டிருந்தோம். அப்போதும் எமக்கு அறியப்படுத்தவில்லை.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment