சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்

223 0

மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.இதனையடுத்து காலை 9 மணியளவில் சாமிமலை ஸ்டரஸ்பி தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை முன் அத்தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த  200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறான போராட்டம் செய்தாலும் வேதன அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாலும் நல்லாட்சிக்கு வாக்களித்தும் மக்களாகிய நாங்கள் ஐனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

நாங்கள் பணிக்கு செல்லும் நாள் ஒன்றுக்கு 1000ரூபாய் வேதனம் வழங்க வேண்டும் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கோசம் எழுப்பியதோடு மலையக அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக இருந்து எமக்கு 1000 ரூபாய் பெற்று தராதபட்சத்தில் சந்தா பணத்தை நிறுத்துவோம் எனவும் கூறினர்.

தொழிலாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறும் போது ஐனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் வெளிநாட்டு பேச்சுவார்த்தை என பிற நாட்டு களுக்கு சென்று விடுகின்றனர் இம்முறை இவ்வாறு இல்லாமல் இருவரும் தலையிட்டு வேதன உயர்வு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதியில் உருவபொம்மையை எரிந்து போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பினர்

Leave a comment