மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில

23 0

தேர்தலை நடத்தி 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், மகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தலை காலம் கடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மாகாண சபைகளில் குறைகளை வைத்துக் கொண்டு தேர்தலுக்குச் செல்ல முடியாது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்தாபித்த குழுவானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பை பிரதமருக்கு அறிவிக்கும். அதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a comment

Your email address will not be published.