தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…………….

199 0

கொட்டகலை – பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகி போய்விடக் கூடாது என தெரிவிக்கும் கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள்.

குறித்த  பேச்சுவார்த்தையில் ஈடுப்படுகின்ற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாம் இருப்போம் என்றும் ஆயிரம் ரூபா சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் பெற்றுக் கொடுக்க அதற்கான சக்தியை தொழிற்சங்கங்களுக்கு வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

சம்பள உயர்வு கோரிக்கைக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை வழியுறுத்திய கோஷங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் ஈடுப்பட்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளத்திற்கு அறிவித்திருக்கும் நிலையில் 15 வீத சம்பள உயர்வை தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மதிக்காத நிலையாக தாம் உணர்வதாகவும், தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.

பண்டிகை காலம் வரும் இந்த நிலையில் நாட்டில் ஏற்றம் பெற்றுள்ள அத்தியவசிய பொருட்களின் விலையை உணர்ந்தும் தொழிலாளர்களின் குடும்பங்களின் இன்றைய வாழ்வாதாரத்தை உணர்ந்தும் தொழிற்சங்கள் முன்வைத்திருக்கும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வர வேணடும் என கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பள உயர்வை பெற்றுத் தர நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கும் இந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

எனவும், பேச்சுவார்த்தயைில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும், முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகாமல் காலம் தாழ்த்தப்படாத நிலையில் சம்பள உயர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தனர்.

Leave a comment