கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

56 0
நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் இரண்டு பேர் சீதுவை ரத்தொலுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுனர்.

அண்மையில் ரத்தொலுவை வீட்டுத் தொகுதியின் மைதானத்திற்கு அருகில் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியகொட, வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவை, ரத்தொலுவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 41 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.