டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் 26ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

3 0

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 

திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் விழா தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாமர மக்களும் கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Related Post

இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் ஜெயலலிதா ஆன்மா நமக்கு கொடுத்த கொடை: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 31, 2017 0
இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா நமக்கு கொடுத்த கொடை என்று பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சிறுநீரக விற்பனை – இந்தியர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 7, 2016 0
சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இந்தியர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு முதன்மை நீதவான்…

ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா!

Posted by - August 2, 2016 0
திமுக எம்.பி.,யுடனான சர்ச்சை சம்பவத்திற்குப்பின் நடந்த விசாரணையின்போது அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறிய தகவல் அரசியல் வட்டாரத்தில்…

கல்விக்கடனுக்காக பாடாய் படுத்திய வங்கி – ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றவருக்கான அனுபவம்

Posted by - May 5, 2018 0
ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது ரேங் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன், கல்லூரி படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை அடைக்க வங்கி அதிகாரிகள் படுத்தி எடுத்ததை…

டெங்கு கொசுப்புழு ஆய்வு – 1,921 நிறுவனங்களுக்கு அபராதம்

Posted by - November 13, 2018 0
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.