துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரொருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளாகிய நிலையில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
ஹபராதுவை, அகுரஸ்ஸ வீதியின் பிலான பிரதேசத்திலேயே குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட நபர் காலி, தெங்கல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவரென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

