இனி குப்பை பிரச்சினை ஏற்படாது!- ரோசி சேனாநாயக்க

312 0

கொழும்பு மாநகர சபையானது காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மீளச்செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையில் முற்கொடுப்பனவாக  100 மில்லியன் ரூபாவை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தி உள்ளது. அத்துடன் மிகுதி தொகையை உரிய  காலத்திற்குள் செலுத்த உள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர்  ரோசி சேனாநாயக்க  தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை பகுதிகளில் குப்பை மற்றும் கழிவகற்றும் பணிகள் தடைப்பட்டமைக்கு காணி மறுசீரமைப்பு நிறுவனமே  காரணமாகும் . இந்நிலையில் இனி குப்பை பிரச்சினை ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரோசி சேனாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment