கல்வித் துறைக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறை அதிகாரிகளின் தேவைகள் போன்றே பாடசாலைகளின் அடிப்படை வசதிகளும் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

