சிகரட்டுக்களை கடத்தி வந்த சீனப் பிரஜைகள் கைது

9899 25

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கடத்தி வந்த இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 மற்றும் 36 வயதுடைய இரண்டு சீனப் பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

அவர்களின் பணப் பொதியில் இருந்து 220 சிகரட் பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான 44,000 சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment