மாத்தறையில் இருந்து பெலியத்தைக்கு புகையிரத சேவை

327 0

இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் மாத்தறை – பெலியத்தை இடையிலான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்படுகின்ற மாத்தறை – கதிர்காமம் புகையிரத வீதியின் முதல் கட்டமான 36 கிலோ மீட்டர் நீளமுடைய மாத்தறை – பெலியத்தை இடையிலான புகையிரத வீதி இவ்வாறு திறந்து வைக்கப்பட உள்ளது.

இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 48 கிலோ மீட்டர் நீளமுடைய பெலியத்தை – ஹம்பாந்தோட்டை இடையிலான வீதி மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் 39 கிலோமீட்டர் நீளமுடைய ஹம்பாந்தோட்டை – கதிர்காமம் இடையிலான புகையிரத வீதியும் நிர்மாணிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமான மாத்தறை – பெலியத்தை இடையிலான புகையிரத வீதியை நிர்மாணிப்பதற்காக 278 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a comment