கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு

239 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.50 மணிக்கு தரையிறங்கவிருந்த Air China CA 424 எனும் விமானமே காலநிலை சீரின்மை காரணமாக இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், அதிகாலை 01.08 மணிக்கு மீண்டும் குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment