ஹம்பாந்தோட்டை, உடமலல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகம் இதனைக் கூறியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

