அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து த.தே.கூ.விடம் ஆனந்த சங்கரி விடுக்கும் வேண்டுகோள்

487 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி பிரதமரிடம் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாயர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

 

தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

அரசியல் கைதிகளின் கோரிக்கையானது தங்களுக்கு நியாயம் வழங்கக்கோரியே தமது குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை என்பதைத் தான் அவர்கள் கேட்கின்றார்கள்.

சிறையில் இவர்களின் எதிர்காலங்கள் பிள்ளைகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்த அரசியல் கைதிகளின் போராட்டமானது உடனடியாக தீர்த்து வைக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் தான் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இச் சட்டத்தை விளங்கிக் கொண்டால் சாதாரணமாக 7 வருடம் முதல் 20 வருடங்கள் வரை தண்டனை வழங்க முடியும் அது மட்டுமன்றி அவர்கள் நன்னடத்தையில் இருப்பார்கள் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர்களை விடுமுறையில் செல்லக்கூட அனுமதிக்க முடியும் அது மட்டுமன்றி ஒரு ஆலோசணைக்குழுவும் இதற்கு இருக்கின்றது. அந்த ஆலோசணை குழுவின் தீர்மானதிற்கு அமைய தீர்மானம் எடுக்கலாம்.

தற்போதைய சூழலில் சமாதானம் ஏற்பட்டுள்ளது என்றும் நல்லிணக்க அரசாங்கம் செயற்படுகின்றது என்று தம்பட்டம் அடிப்பவர்கள் இதனை அரசாங்கத்துடன் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பயங்கரவாதச்சட்டம் அமுலில் இருக்கினறது என்றால் அதற்கு எதிராக பேசுவதற்கு அதிகாரம் இருக்கிறது. 13 ஆம் திருத்தச்சட்டத்தின்படி அரசியல் கைதிகள் சரி குற்றம் சாட்டப்பட்ட கைதிகளாக இருந்தாலும் சரி அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிப்பதற்கு அதிகாரமுள்ளது.

இதனை ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமருக்கு தெரியா விட்டால் கூட்டமைப்பின் சட்டவல்லுநர்கள் எனக் கூறுகின்ற இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Leave a comment