பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை – இந்திரஜித் குமாரசுவாமி

459 0

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நாணயமாற்று விகித சிக்கல் நிலை மற்றும் கடன் நிலை என்பவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கியினால் செயற்திறனான வகையில் முன்னெடுக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மத்திய வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாணயமாற்று விகிதம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் போதிய தெளிவற்ற நிலையும் காணப்படுகின்றது.

நான் சுமார் 20 நாடுகளில் பணியாற்றியிருக்கின்றேன். ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் நாட்டின் பொருளாதார நிலை முற்றாக தளம்பலடையும் என மக்கள் கருதுகின்றனர். ஆனால் எமது சேமிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன அனுகூலமான நிலையில் உள்ளன. இத்தகையதொரு நிலையில் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என எவ்வாறு கூறமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a comment