விடுதி முகாமையாளர் மர்ம மரணம்

311 0

உல்லாச விடுதி முகாமையாளர் ஒருவர் விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமான சம்பவமொன்று பண்டாரவளைப்பகுதியில் எல்ல உல்லாச விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி விடுதி முகாமையாளரான ஆர். எய்ச். சிசிர ஜீவந்த நந்தசிரி என்ற நாற்பத்தொன்பது வயது நிரம்பியவரே மர்மமான முறையில் மரணமாகியுள்ளார்.

இந்த நபர் ஏற்கனவே மார்பு நோயினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரென்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஆனாலும் இடம்பெற்ற மரணம் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாகவும் அது தொடர்பான புலனாய்வு விசாரனைகள் இடம் ;பெற்று வருவதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment