ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவம் தேவையில்லை- ரஞ்சித் மத்தும பண்டார

31036 0

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளைஞர் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தவும் படையினரை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஆராயவுள்ளதாகவும் சட்டமொழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment