 யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இன்று வரையில் வீதிவிபத்துக்களால் 896 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் 19பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வீதி விபத்துக்களால் 509 பேர் வரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களில் 8 உயிரிழந்துள்ளதாகவும் அதன் பின்னரான மூன்று மாத காலத்தில் 387பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களில் 11பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அரச வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்தவருடம் 3204பேர் வீதி விபத்துக்களால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 64பேர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் 30வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.