எனது ஆட்சியில் வேகமான அபிவிருத்தி இருந்தது- சந்திரிகா

333 0

தனது ஆட்சிக் காலத்தில் நாட்டி வேகமான அபிவிருத்தி இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

அத்துடன் தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தையும் குறிப்பிடத்தக்க அளவு முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இருந்த போது 06 ஆண்டு காலத்தில் தனி நபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்ததாகவும், நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

Leave a comment