எந்தவொரு ஸ்னைபர் துப்பாக்கியும் காணாமல் போகவில்லை-நளின் பண்டார

325 0

பொலிஸ் பிரிவில் இருந்து ஸ்னைபர் துப்பாக்கி காணாமலாக்கப்பட்டுள்ளது. இத்துப்பாக்கி  யாரை கொலை செய்ய காணாமலாக்கப்பட்டுள்ளது என்று எதிர் தரப்பினர் வேடிக்கையான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையில் எந்தவொரு ஸ்னைபர் துப்பாக்கியும் காணாமலாகவில்லை என  சட்டம் ஒழுங்கு  பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்னைபர் துப்பாக்கிகள் அதிரடி  படையினரிடமும், களுத்துறை  பொலிஸ் பயிற்சி கல்லூரியிலும், பொலிஸ் தலைமையகததிலும் காணப்படுகின்றது. சிலவேளை  குறித்த  துப்பாக்கி  பயங்கரவாத  புலனாய்வு  பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலே விசாரணைகள் முன்னெடுகப்பட்டு வருகின்றன.

எவ்வாறு அருப்பினும் இதன் காரணமாக தேசிய பாதுகாப்பிற் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Leave a comment