எல்பிட்டிய பகுதியில் சடலம் மீட்பு

315 0

எல்பிட்டிய, அனுருத்தகம பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (27) இரவு 8 மணி அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் அப்பகுதியை சேர்ந்த 42 வயது நிரம்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைகள் இன்று (28) நடைபெறும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment