பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் குரல் பதிவு செய்வதற்காகவே திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

