எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

254 0

பிரபல அமைச்சர் ஒருவரின் நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படுள்ளது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விலைச் சூத்திரத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 திகதி மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ஹர்ஷ டி சில்லா ரூபாவின் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுகொண்டுளார். இவ்வாறான நிலையில் குறித்த கருத்தை வெளியிட்ட பின்னர் அவர் வெளிநாடு சென்றுள்ளார். மேலும் கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரபல அமைச்சர் ஒருவர் தனது நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு இருபது இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

இதேவேளை ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும் பிரதமரின் பாவனைக்கென 58 கோடி ரூபா பெறுமதியில் இரு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் போதும் என்றாகிவிட்டது. ஆகவே ஆட்சி மாற்றத்திற்கு தயார் நிலையில் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment