கொழும்பிலுள்ள வெலிக்கடை மற்றும் மெகசின் சிலைச்சாலைகளை பொலிஸ் அதிரடிப் படை பிரிவினரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் விசாரணைகளுக்காகவே அடுத்த மாதம் முதல் விசேட அதிரடிப்படையிடம் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையிலுள்ள 10 பொலிஸ் அதிகாரிகள் விசேட அதிரடிப்படையினரின் உதவிக்காக நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

