சட்டவிரோதமான முறையில் தங்க மோதிரங்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான வியாபாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சந்தேக நபரின் காற்சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்ட தங்க மோதிரங்ளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 299.80 கிராம் நிறையுடைய சுமார் 17 இலட்சத்து 98 ஆயிரத்து 980 ரூபா பெறுமதியான 10 தங்க மோதிரங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

