பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க எவ்வித தகுதிகளும் நாலக்க சில்வாவுக்கு கிடையாது. நாட்டின் தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் இவர் மீது சந்தேகத்தினை கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. பதவி நீக்கம் செய்து கைது செய்யப்பட்டே சுயாதீன விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி. எல். பீரிஸ். தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சதித்திட்டம் தொடர்பிலான விசாரனையில் பிரதிபொலிஸ் மா அதிபருக்கு விசேட  சலுகைகள் வழங்கப்படுகின்றது.இவ்விடயத்தில் ஒரு சாதாரண மனிதர் தொடர்புப்பட்டருந்தால்  அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்பார்கள் ஆனால்  பிரதிபொலிஸ்மா அதிபர் எவ்விதமான கட்டுப்பாடுகளோ,  தடைகளோ இன்றி செயற்படுகின்றார்.  பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியை  நாலக  சில்வா வகிப்பதற்கு எவ்வித தகுதிகளும் கிடையாது என்றார்.