சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் -எம்.ஏ.சுமந்திரன்

1595 0

அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் என ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரேரணை ஒன்றைமுன்வைத்து உரையாற்றவுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினர், அதாவது சிலர் செய்த பாரிய சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யார் குற்றமிழைத்தது, அவை என்ன குற்றம் என வெளிப்படுத்தப்படாமல், பெயர் தெரியாத நபர்களுக்கு மன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால் அதை ஏற்க முடியாது.

அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை சமமாக காட்டும் அந்த பிரேரணையை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

அவ்வாறான பிரேரணை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதே அதற்கு உடன் எதிர்ப்பினை நாம் வெளியிட்டுள்ளோம். இது தொடர்பான எமது நிலைப்பாட்டையும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.

Leave a comment