பருத்தித்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

371 0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று (23) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறிய பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கற்கோவளம், புனித நகரைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment