தங்காலையில் விபத்து – இத்தாலி பிரஜை பலி

331 0

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உணாகூருவ பகுதியில், இன்று அதிகாலை (21), இடம்பெற்ற விபத்தில், இத்தாலி பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய, பென்சிஸ்கோ செனொட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தங்காலையிலிருந்து திக்வளை நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து,மோட்டார் சைக்கிள் தடம்புரண்டதால், படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment