இன்று இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து

426 7

ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் ஏற்பட்டு விபத்து காரணமாக இன்று இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இன்று கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி பயணிக்கு மீனகயா புகையிரதத்தினதும், இரவு 9.30 மணிக்கு திருகோணமலை நோக்கி பயணிக்கும் தபால் புகையிரதத்தினதும் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிர கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழந்திருந்தன.

இந்த விபத்து காரணமாக குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதுடன் புகையிரத தண்டவாளத்திற்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதி வரையான போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத உள்ளதன் காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதி வழியாக செல்லும் ஏனைய புகையிரதங்கள் மகோ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு ​நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment