ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் உடனடியாக விசாரணை வேண்டும்-அஜித் பீ. பெரேரா

206 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் உண்மை என்றால் அது தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மீது சமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், அச்சுறுத்துவது, கொலை செய்வது ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் மூலோபயம் அல்ல என்றும் ஜனநாயகத்தை தவிர்த்து வேறு பாதை எமக்கில்லை என்றும் கூறினார்.

இதற்கு முன்னர் கொலைக் குற்றத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, புதையல் தோண்டிய சம்பவத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் சுவிஸ்குமாருக்கு பாதுகாப்பளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாக கூறினார்.

Leave a comment