கலைஞர் எழுச்சி பேரவை என்ற புதிய அமைப்பை அழகிரி தொடங்க இருப்பதாக ஆதரவாளர் தகவல்

13 0

கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். ஆனால், கருணாநிதி இருக்கும் போதே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார்.
இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளை மறுநாளும் சந்தித்து முக அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Post

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது: ராஜேஷ் லக்கானி தகவல்

Posted by - December 22, 2017 0
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

இந்தியாவில் 24 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 

Posted by - August 14, 2017 0
வெளிநாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே, அங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு…

கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை

Posted by - February 7, 2018 0
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள கருவியை அகற்ற டாக்டர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதற்காக அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை எதிர்த்திடுவோம் – மே பதினேழு இயக்கம்

Posted by - August 3, 2017 0
ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று 2016 ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து சொன்னோம்.மே மாதம் 4 ஆம் தேதி மீண்டும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.WTO…

தமிழகத்தில் வார்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு

Posted by - December 14, 2016 0
நேற்று முன்தினம் வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published.