யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வான் கண்காட்சியும் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பும்

2 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி நோர்வே தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் இன்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் அரசியல் ரீதியாக அதி முக்கியத்துவம் வாய்ந்த Brandenburger Tor வரலாற்று சதுக்கத்தில் தனது கண்காட்சியை பார்வைக்கு வைத்து தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

அத்தோடு இன்றைய தினம் மதியம் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் வெளிவிவகார அமைச்சில் சிறிலங்காவுக்கான இடைக்கால உயர் அதிகாரியுடன் முக்கிய சந்திப்பும் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது. சிங்கள பேரினவாத அரசின் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு அதற்கான விளக்க அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.

இச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக சர்வதேசத்தை ஏமாற்றி வருவதையும், தாயகத்தில் நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் முதன்மைப்படுத்தி சுட்டிக்காட்டியதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலம் நிறைவடையும் தருணம் சர்வதேச நாடுகளால் இறுக்கமான முடிவு முன்வைக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் நேற்றைய தினம் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் , அத்தோடு சர்வதேச கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டதை தெரிவிக்கப்பட்டது.

நாளைய தினம் தமிழ் வான் கண்காட்சி Düsseldorf நகரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவு கூரப்பட்ட சிறிலங்கா அரசின் இனப்படுகொலையான கறுப்பு யூலை

Posted by - July 22, 2018 0
கறுப்பு யூலை என்று அழைக்கப்படும் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் 35வது ஆண்டின் நினைவு நிகழ்வுகள்…

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி

Posted by - May 29, 2018 0
27.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சுவெற்ற என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும்…

Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்-பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Posted by - October 8, 2018 0
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர். கடந்த (02.09.2018)…

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – தாய்த் தமிழகத்தில் இருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்!

Posted by - February 16, 2017 0
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின…

மாவீரர்நாள் 2016 அன்று யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டது.

Posted by - November 29, 2016 0
விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்…

Leave a comment

Your email address will not be published.