முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் சதொச முன்னாள் தலைவர் ஆகியோர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
கடந்த 2013ம் ஆண்டில் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கடந்த 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது

