துப்பாக்கியுடன் ஒருவர் கைது

338 0

வவுனியாவில் குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்று  கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் காட்டு பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் 25 வயதுடைய  நபரையே  கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment