வரிப்பணத்தின் பெரும்பாலான தொகை மாணவர்களுக்காகவே செலவிடப்படுகின்றது –அகிலவிராஜ்

321 0

நாட்டு மக்களிடமிருந்து அறவிடப்படும் வரியில் கூடுதலான தொகையை பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் செலவிடுகிறது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் தேசிய இறைவரி ஆணையாளர் நதி திசாநாயக்க எழுதிய ‘அழகியதோர் நாளையதினம்’ என்ற தமிழ் புத்தகத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கூடுதலான தொகையை பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் செலவிடுகிறது இந்த விடயம் குறித்து சிந்தித்து கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மாணவர்களை கேட்டுள்ளார். மக்களிமிருந்து அறவிடப்படும் வரியின் மூலமே பாடப்புத்தகம், சீருடை, காப்புறுதி உட்பட சகல வசதிகளும் வழங்கப்படுகின்றன.

வரி செலுத்தாது நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது சிரமமானதாகும் என்றும் அவர் கூறினார்.

Leave a comment