மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தாது தள்ளிப் போட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை தனது நீதிபதிகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

