வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு- மங்கள

321 0

அரசாங்கத்தின் எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நவம்பர் மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பின் விவாதம் நவம்பர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்ட வாசிப்பின் விவாதத்தின் வாக்கெடுப்பு நவம்பர் 16ம் திகதி மாலை 5 மணிக்கு நடாத்தப்படவுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நவம்பர் 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 8ம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment