வனாதவில்லு பிரதேச சபையின் உறுப்பினர் கைது

338 0

வனாதவில்லு அருவக்காடு குப்பை கொட்டும் பிரதேசத்திற்கு அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனாதவில்லு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான புத்திக்க கிஹான் அபேசிங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேரக்குளிய மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் நேற்று குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment