ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாது-சந்திம

321 0

2030 ஆண்டு வரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை எடுத்துவந்தாலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித்தலைவர் பதவியில் இருந்தும் விலக மாட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment